Cell: +91 98650 91526
Registration Number
Govt. Registration
Madurai District Consumer No
Reg No: 075940639
Date:28.01.2025
TN/2017/0159287
Reg No: CSR00028543
Reg No: AAATH8604HF20218
Year: 2011
Reg No:AAATH8604HE20210
Year:2010
- நிறுவனர் & தலைவர், மனிதநேய நுகர்வோர் பாதுகாப்பு
ஆர்கனைசேஷன், மதுரை
- மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு , குடும்பநலக் குழு முன்னாள் உறுப்பினர்
- மதுரை மேற்கு சரகம் - உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கண்காணிப்புக் குழு
உறுப்பினர்.
- மதுரை மாவட்ட அரசு மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் குழு உறுப்பினர்.
நான் 26.02.1964ல் மதுரையில் பிறந்தேன். 1985ல் எனது இளம் வயதிலேயே பொதுச் சேவைகள் செய்ய ஆரம்பித்தேன்.
30.08.1992ல் இராஜபாளையத்தில் திருமணம் முடித்தேன். பொதுச் சேவைக்கு முழுமையாக நான் என்னை அர்பணித்ததாலோ
என்னவோ இறைவன் எனக்கு பிள்ளை வரத்தை கொடுக்கவில்லை. அதையே ஒரு வரமாகக் கருதி பொதுச் சேவையை நான்
முழுநேரமாகவே செய்ய ஆரம்பித்தேன்.
2004 முதல் 2006 வரை மதுரையில் மனித உரிமைகள் என்ற அமைப்பில் இருந்தேன். 2007ல் மதுரா மனித உரிமைகள்
என்ற அமைப்பை ஆரம்பித்தேன். 2010ல் மதுரா மனித உரிமைகள் என்ற பெயரை மனிதநேய பாதுகாப்பு ஆர்கனைசேஷன்
என்று அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மத்திய அரசு அலுவலகத்தில் எங்கள் லோகோவை பதிவு செய்து
சான்றிதழும் பெற்றுள்ளேன்.

15.04.2022 இன்று மாலை 5 மணிக்கு மதுரை
கோரிப்பாளையம் தேவர் சிலை அருகில் சூப்பர் மெடிக்கல் கடை முன்புற வாசலிலே 10*10 சைஸில் நீர்மோர் பந்தல்
மதுரை மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலகம் மற்றும் காவல்துறை அலுவலகம் மூலமாக அனுமதி பெற்று
எங்களுடைய மனிதநேய நுகர்வோர் பாதுகாப்பு ஆர்கனைசேஷன் மூலமாக மதுரை சித்தனை சித்திரை கள்ளழகர் திருவிழா
மூலமாக பொதுமக்களுக்கு நீர்மோர் கடந்த 2006 முதல் இன்றுவரை நீர்மோர் வழங்கி வருகிறோம்
15.04.22, 16.04.22. இந்த இரண்டு நாட்கள் நீர்மோர் வழங்கி வழங்கினோம்.
2000 லிட்டர் நீர்மோர் வழங்கினோம். பொதுமக்கள் எல்லோரும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர்கள் நீர்மோர்
குடித்தார்கள் மிகவும் சந்தோசமாக உள்ளது.
இன்று சித்திரை பௌர்ணமி அன்று கள்ளழகர் இறங்கிய தினம் இந்த வருடம் மக்கள் அதிகமாக சாமி தரிசனம்
செய்தார்கள். கிட்டத்தட்ட 12 லட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள். இன்று காலை வைகை ஆற்றில் கள்ளழகர் சாமி
இறங்கும்போது பச்சை உடை உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். பொதுவாக மக்கள் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய
உடன் மக்கள் காலை பதினோரு மணி அளவில் கலைந்து செல்வார்கள் இன்று மாலை மக்கள் மதியம் 3 மணி அளவில்
கலைந்து சென்றார்கள்.

மக்கள் அனைவரும் சந்தோசமாக இருந்தார்கள் என்றைக்கும்
இல்லாத அளவு மக்கள் இருந்தார்கள் மற்றும் மதுரை மாநகராட்சி CE தலைமை செயற்பொறியாளர் திரு அரசு அவர்களுக்கு
எங்கள் அமைப்பு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எங்கள் அமைப்பிற்கு 2000 லிட்டர் இலவசமாக
பொதுமக்கள் நலன் காரணமாக குடிதண்ணீர் வழங்கியதற்காக ஒவ்வொரு வருடம் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து
எங்கள் அமைப்பிற்கு இலவசமாக 2000 லிட்டர் குடிதண்ணீர் வழங்குவார்கள் இந்த முறையும் மாநகராட்சி மூலமாக
குடிதண்ணீர் வழங்கியுள்ளார்கள்.
அதற்காக எங்கள் அமைப்பு சார்பாக மதுரை மாநகராட்சி அலுவலகத்திற்கு எங்கள் நன்றியை காணிக்கையாக தெரிவித்துக்
கொள்கிறோம் இந்த நிகழ்ச்சியில் மதுரை காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு. எஸ். குமரவேல் ஓய்வு அவர்கள்
தலைமையில் நீர்மோர் துவக்கி வைத்தார்கள் மற்றும் மதுரை மாநகர் CBCID காவல் துணை கண்காணிப்பாளர் திரு.M.
ஜஸ்டின் பிரபாகரன் அவர்களும் மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு R.சுந்தர் அவர்களும் மதுரை
மாவட்ட உணவு பொருள் வழங்கல் பறக்கும் படை தாசில்தார் திரு V. சிவபாலன் அவர்களும் மதுரை மாவட்ட உணவு பொருள்
வழங்கல் நேர்முக உதவியாளர் திரு T.M. கோபி அவர்களும் மனிதநேய நுகர்வோர் பாதுகாப்பு ஆர்கனைசேஷன்
உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள் தலைவர் டாக்டர் என் அசோகன் அவர்கள்
கலந்துகொண்டு சேவை செய்தார்கள் உடன் வீடியோ வீடியோகிராபர் சோமு ஆதி ஸ்டுடியோ போட்டோகிராபர் வினோத் கலந்து
கொண்டனர்.
நன்றி வணக்கம்
To conduct, establish, maintain, run, develop, improve hospitals, clinics, dispensaries, maternity homes, rescue homes to help treat all people without any distinction of caste, creed, colour or community at costs affordable to them or even free of cost.
To carry out objects of general public utility and security, such as village upliftment, rural reconstruction, public health and hygiene, community development, welfare of women and children, promotion of cottage industries, self-employment schemes etc.
To give goods, clothing, medicines, cash grants and any other help that may be necessary to the poor and afflicted people in distress affected by natural calamities such as earthquake, floods, famine, tsunami, storm, cyclones, lighting etc.